Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

நான் கிளாமர் பொண்ணு இல்லை: நடிகை பிரியா பவானி சங்கர்

28 பிப், 2021 - 14:26 IST
எழுத்தின் அளவு:
I-am-not-glamour-girl-says-Priya-Bhavani-Shankar

மின்மினிகளாக மின்னும் கண்மணிகள்... சிந்தாமல் சிந்தும் சிரிப்பு சிதறல்கள் என மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நம் மனதைகொள்ளையடித்து, களத்தில் சந்திப்போம்ல் கலக்கிய நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...

* களத்தில் சந்திப்போம் படம் பற்றி
ஜீவா, அருள்நிதி என இரண்டு ஹீரோ. நான் அருள்நிதிக்கு ஜோடி. மஞ்சுமா தான் ஹீரோயின். நான் அருள்நிதியுடன் கொஞ்சம் வந்து போறேன். படம் பார்க்கும் பசங்க நட்பை நினைச்சு பார்ப்பாங்க. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர்.

* எப்படி ஒரு கதையில் நடிக்க முடிவு எடுப்பீர்கள்

படத்தின் தயாரிப்பாளர் யாருன்னு பார்ப்பேன். இன்றைய சூழலில் பெரிய தயாரிப்பாளர்களே அதிக படம் கொடுக்குறது இல்லை. அதனால் தயாரிப்பு அப்புறம்; கதை நல்லா இருக்கான்னு பார்த்த தான் முடிவு எடுப்பேன்.




* மீடியா டூ நடிகை வரவேற்பு எப்படி இருக்கு
சினிமாவுக்கு நான் வரும் போது பெரிய வரவேற்பு இல்லை. வேலை செய்த டிவி நிறுவனம் எனக்கு பிளஸ். நிறைய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், ரத்னாவுக்கு நன்றி. மேயாத மான் நடிக்கும் போது பெரிய வாய்ப்புனு தெரியலை, அதுதான் சினிமா பயணத்தை மாற்றி இருக்கு.

* உங்களை ரசிக்கும் ரசிகர்கள் பற்றி

என்னை டிவியில் பார்த்த பார்வையாளர்கள் இப்போ சினிமாவில் பார்க்கிறார்கள். ரசிகர்கள் ஈஸியா கிடைக்க மாட்டாங்க. டிவி வாய்ப்பை சரியா பயன்படுத்துறேன்னு நம்புறேன், டிவியில் இருந்து வந்து 2 படம் நடிச்சுட்டு போயிட்டாங்கனு தவறான உதாரணமாக விரும்பலை.




* பட வாய்ப்பை பெறுவதற்கான போட்டிகள்
சினிமா துறையில் போட்டிகள் நிறைய இருக்கும். ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்காங்க. நம்மள மீறி நமக்குள் ஒரு ஒப்பீடு வந்து விடும். போட்டியை பார்த்து ஓட ஆரம்பிக்க கூடாது. முடிந்தவரை வாய்ப்பை பெற முயற்சி செய்யனும்.

* உங்களை ரசிகர்கள் கிளாமரில் பார்க்கணும்னு...
விண்ணைத்தாண்டி வருவாயால் திரிஷா கிளாமர் பண்ணினாங்க. அதுல ஸ்கின் வெளியே தெரியலை. முகம் சுளிக்க வைப்பது தான் கிளாமர் என்றால் ஆபாசம்னு தான் சொல்லுவேன். ரொம்ப எளிமையான பொண்ணு கிளாமர் பொண்ணு இல்லை

* தமிழ் சினிமாவில் உங்கள் ஆசை
டிவியில் ரியாலிட்டி ஷோ பண்ணி பேமஸாகலாம். சினிமா அப்படி இல்லைங்குற புரிதலோடு மேயாதமான் நடித்தேன். மக்கள் வரவேற்பு கொடுத்தாங்க. கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிப்பதை விட நல்ல படங்களில் நடித்தாலே போதும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கருணையும், கண்டிப்பும் கலந்த கலவை ஜெ., - மனம் திறக்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலாகருணையும், கண்டிப்பும் கலந்த கலவை ... த்ரிஷியம் 2 வந்தாச்சு பாபநாசம் 2 எப்போ? - ஜீத்து ஜோசப் பேட்டி த்ரிஷியம் 2 வந்தாச்சு பாபநாசம் 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in