Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2018 - அதிகப் படங்களில் நடித்த வரலட்சுமி

20 டிச, 2018 - 17:18 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-most-acted-films-in-2018-tamil-cinema

2018ம் ஆண்டில் தாங்கள் நடித்த படங்கள் மூலம் எந்த ஒரு ஹீரோயினும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இந்த ஆண்டில் சில வித்தியாசமான படங்கள் வந்தாலும் ஒட்டு மொத்த படமாகத்தான் அவை பெரிதும் ரசிக்கப்பட்டன. அந்தப் படங்களில் நடித்த நாயகர்களைப் பற்றியோ, நாயகிகளைப் பற்றியோ யாரும் அதிகம் பாராட்டிப் பேசவில்லை.

முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த சில முன்னணி ஹீரோயின்கள் அந்தப் படங்களில் முக்கியத்துவம் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். இருப்பினும் ஒரு சில படங்களில் நாயகிகளின் கதாபாத்திரங்கள் கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தன.

2018ல் அதிகப் படங்களில் நடித்த நாயகி என்ற பெயரை வரலட்சுமி சரத்குமார் பெறுகிறார். “மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், சண்டக்கோழி 2, சர்கார், மாரி” ஆகிய படங்கள் அவருடைய இந்த ஆண்டு திரைப்படங்களின் பட்டியலில் சேர்கின்றன. இவற்றில் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் மட்டுமே அவர் தனி ஹீரோயினாக நடித்திருந்தார். மற்ற படங்களில் இரண்டாவது ஹீரோயினாக, வில்லியாக நடித்திருந்தார்.

'போடா போடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான வரலட்சுமி தனிப்பட்ட ஹீரோயினாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவர் நாயகியாக அறிமுகமான இந்த ஆறு வருடங்களில் இந்த ஆண்டில் தான் அவர் நடித்த படங்கள் அதிகமாக உள்ளன.

நாயகியாக இல்லை என்றாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில், வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகைகள் என்று இன்று யாருமில்லை. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடிக்கும் அளவிற்கு வரலட்சுமி தற்போது வளர்ந்துள்ளார்.

வரலட்சுமிக்குப் பிறகு தனி ஹீரோயினாக அதிகப் படங்களில் நடித்தவர் என்ற பெருமையை கீர்த்தி சுரேஷ் பெறுகிறார். அவர் நடித்து இந்த ஆண்டில், 'தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார்' ஆகிய படங்கள் வெளிவந்தன. கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த நான்கு படங்களுமே பெரிய ஹீரோக்களின் படங்கள் தான். அதில் 'சர்கார்' படம் பெரிய வெற்றியையும், 'தானா சேர்ந்த கூட்டம்' சுமாரான வெற்றியையும், 'சண்டக்கோழி 2, சாமி 2' தோல்விப் படங்களாகவும் அமைந்தன.

2018ல் முன்னணி ஹீரோயின்களும் அவர்கள் நடித்து வெளிவந்த படங்களும்...

ஐஸ்வர்யா ராஜேஷ் : லட்சுமி, வடசென்னை, செக்கச் சிவந்த வானம், கனா

ஜோதிகா : நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி


சமந்தா : இரும்புத்திரை, சீமராஜா, யுடர்ன்



நயன்தாரா : கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்


த்ரிஷா : மோகினி, 96



ஹன்சிகா : குலேபகாவலி, துப்பாக்கி முனை

ஆன்ட்ரியா : விஸ்வரூபம் 2, வடசென்னை

அமலா பால் : பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன்

ரெஜினா : மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம்

நிக்கி கல்ராணி : கலகலப்பு 2, பக்கா

நிவேதா பெத்துராஜ் : டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்

சாயிஷா : கஜினிகாந்த், கடைக்குட்டி சிங்கம்

தமன்னா : ஸ்கெட்ச்

நாயகிகள் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் வழக்கம் போல இந்த ஆண்டும் குறைவு தான். நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா போன்ற ஒரு சிலருக்கு மட்டும் தான் அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து நாளை வெளிவர உள்ள 'கனா' படமும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தான். இம்மாதிரியான நாயகிகளுக்கும் முக்கியத்தும் கொடுக்கும் படங்கள், வருடத்திற்கு பத்து படங்களாவது வந்தால் தான் தமிழ் சினிமாவின் தடமும் மாறும். நாயகர்களின் கையில் இருந்து சினிமாவும் இயக்குனர்கள் பக்கமும், மற்றவர்கள் பக்கமும் செல்லும். 2019ல் அப்படிப்பட்ட படங்களை எதிர்பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in