கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து |
ஜெய், பிரேம்ஜி, சம்பத், வைபவ், அரவிந்த், சினேகா, மெலனி, பியா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் புதிய படம் கோவா. சென்னை 28, சரோஜா படங்களின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் கோவா படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ்:-
* ஆக்கர் ஸ்டூடியோ தயாரிப்பில் சவுந்தர்யா தயாரிக்கும் முதல் படம் கோவா.
* 9 பாடல்கள் கேசட்டில் இருந்தாலும், படத்தை பார்த்து விட்டு, யுவன் 2 பாடல்களை சேர்த்துள்ளார். மொத்தம் 11 பாடல்களுடன் ஒரு இசை விருந்தே நடத்தியுள்ளார்.
* சினேகாவின் உடைகளை அவரது சகோதரி சங்கீதாவே வடிவமைத்துள்ளார். அவரது கேரக்டரை மட்டும் இன்னும் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
* கோவா படத்தின் சூட்டிங்கை மதுரை மற்றும் கோவாவில் அதிகம் நடத்தியிருக்கிறார்கள்.
* இளையராஜா பிறந்த ஊரான பண்ணைபுரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சுமார் 20 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.
* எஸ்.பி.பி.யும், இளையராஜாவும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
* படத்தில் நடிக்கும் புதுமுக நடிகை மெலனி ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.
* தனி பாட்டு, பைட் என அசத்தியிருக்கும் பிரேம்ஜி 5 கெட்-அப்களில் அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம்.
* கங்கை அமரன் எழுதிய, இளையராஜா- எஸ்.பி.பி.- சித்ரா பாடியிருக்கும் பாடலுக்கு வெள்ளைக்கார நடன அழகிகள் ஆடியிருக்கிறார்கள்.
* நடிகர்கள் ரவிகாந்த், பிச்சுமணி 12 வித கெட்-அப்களில் ஒரு சில காட்சிகளில் வருகின்றனர்.
* கோவா படம் ரொம்பவே கலர்புல்லாக உருவாகியிருக்கிறாம். படத்தில் நடித்துள்ள அத்தனை நட்சத்திரங்களும் ஈகோ இல்லாமலும், அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்குமாறும் இயக்குனர் வெங்கட்பிரபு காட்சிகளை எடுத்துள்ளாராம்.
- தினமலர் சினி டீம் -