''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
'மதுர வீரன் அழகுல மாட்டு கொம்பு திமிருல பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே' என 'விருமன்'ல் சும்மா பட்டாம்பூச்சி போல் படபடவென பறந்து, ஆடி, நடித்து, காந்த கண்களால் ரசிகர்களை கவர்ந்திழுத்த மெல்லிடை அழகி அதிதி ஷங்கர் 'மாவீரன்' படத்தில் நடித்தது குறித்து மனம் திறக்கிறார்...
'மாவீரன்' படம் குறித்து சொல்லுங்களேன்...
சமூகத்தில் நாம் தினமும் சந்திக்கும் பிரச்னை, வாழ்க்கையில நடக்கும் விஷயங்களை இந்த படத்தில் நல்லா சொல்லி இருக்காங்க. பத்திரிகையாளர் கேரக்டரில் நடிச்சிருக்கேன். காஸ்ட்யூம்ல இருந்து ரொம்ப சிம்பிளா தான் வறேன்.
பத்திரிகையாளர் கேரக்டருக்கு பயிற்சி
இயக்குனர் மடோன் அஸ்வின் எல்லாமே சொல்லி கொடுத்தார். அதிதி எனர்ஜி வேண்டாம். நடிப்பு ஓவரா இருக்கக்கூடாது, எளிமையாக நடிப்பு போதும்னு சொல்லிட்டார். அவர் சொன்னதை அப்படியே செய்திருக் கிறேன்.
படத்துல மிஷ்கின்,சரிதா இருக்காங்களே
எனக்கு மிஷ்கின் உடன் நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. எல்லாரும் சேர்ந்து இருக்கும் சில சீனில் இருப்பேன். சரிதா கூட நிறைய சீன் இருக்கு. அவங்க படங்களில் நடித்த அனுபவம் பத்தி நிறைய சொன்னாங்க. அவங்க நடித்த நிறைய பாட்டு வீடியோ காட்டுவாங்க..
கார்த்தி, சிவகார்த்திகேயன் உடன் நடித்தது
'விருமன்' கார்த்தி உடன் தான் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானேன். சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து சொன்னார். நீங்களும் பெரிதாக வளர வேண்டும் என்றார் அவர்கிட்டவும் நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் அடுத்த படமும் நடிக்க வாய்ப்பு இருக்கு.
சிவகார்த்திகேயனை வைச்சு பைக் எல்லாம் ஓட்டுறீங்களே
அதிதி பைக்ல நீங்க உட்கார்ந்து போகணும்னு சிவாவிடம் இயக்குனர் கூறினார். 'யாரை நம்பி இந்த மாதிரி சீன் யோசிக்கிறீங்க' என்றார் சிவா. உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமானு சிவா கேட்டார். நல்லா ஓட்டுவேன் நம்பி உட்காருங்கனு சொன்னேன். பார்த்து ஓட்டுங்கன்னு சொல்லி உட்கார்ந்தார்.
மாவீரன் படத்தோட பாடல்கள் பத்தி சொல்லுங்க
அனிருத் குரலில் 'சீனா சீனா' பயங்கரமான குத்து பாட்டு. ஆனால் இயக்குனர் என்னை ஆட விடலை. ஆனால், 'வண்ணாரப்பேட்டை' பாட்டில் சிவா உடன் சேர்ந்து டூயட் பாடிட்டேன்.
இயக்குனரான அப்பா ஷங்கர் மூலம் வாய்ப்புகள்
இதுவரைக்கும் எனக்கு வந்த வாய்ப்புகள் அவர் மூலமா வரலை, அதிதி என்ன பண்ண முடியும்னு தான் நினைச்சு கதை கொண்டு வராங்க... நான் முதலில் கதை கேட்டு தான் அப்பாகிட்ட சொல்வேன். அவர் அனுமதியுடன் தான் படத்தை தீர்மானிக்கிறேன். அப்பா, அம்மா சப்போர்ட்டா இருக்காங்க.
அப்பா இயக்கத்தில் 'இந்தியன் 2'ல் நடிப்பீங்களா
வாய்ப்பு இல்லை... இந்த படம் ஆரம்பித்த பின்பு தான் நடிக்க வந்தேன். அதனால புதுசா என்னை சேர்க்க முடியல. ஆனால், நடிகையானாலும் அப்பா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மட்டும் இன்னும் போயிட்டு தான் இருக்கேன். அடுத்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறேன்.
எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஆசை
அப்பா இயக்கத்தில் நடிக்கணும். அப்புறம் 'திருச்சிற்றம்பலம்' இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கணும், 'லவ் டுடே' இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிக்கணும்
இயக்குனர் ஆவீங்களா...
இல்லை... ஒரு இசை ஆல்பம் பண்ண அப்பப்போ எழுதி வச்சுட்டு இருக்கிறேன். தொடர்ந்து என் படங்களுக்கு ரசிகர்கள் சப்போர்ட் பண்ணுங்கன்னு நான் கேட்டுக்குறேன்.