லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சித்தி 2 சீரியலில் நடித்து வரும் ப்ரீத்தி சர்மா 'வாடா ராசா' என்ற ஆல்பம் பாடலில் கென் கருணாஸுடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் கென் கருணாஸ் நடிப்பிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதனையடுத்து அவர் தனது அடுத்த புராஜெக்டாக ஆல்பம் பாடல் ஒன்றை தயாரித்துள்ளார்.
கென் கருணாஸ் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ள 'வாடா ராசா' என்ற பாடலை கென் கருணாஸின் அம்மா க்ரேஸ் கருணாஸ் பாடியுள்ளார். இதில், கென் கருணாஸ் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி சர்மாவுடன் இணைந்து நடன ஜோடியாக திரையில் தோன்றுகின்றனர். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள 'வாடா ராசா' பாடலை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் தங்களது சமூக ஊடகங்களில் வெளியிடவுள்ளனர். இதனால் இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.