நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சமூக பிரச்சனைகளுக்கு தொலைக்காட்சி தொடர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி தொடர் 100 நாட்களை கடந்து விட்டது.
இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமான தீபிகா கூறுகையில் , தங்கமயில் எனது லட்சிய கதாபாத்திரம், மனதிற்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம். தைரியமும் துணிச்சலும் கலந்த பெண், ஆனால் குடும்பம் என்று வரும்போது மிகவும் மென்மையானவளாக தங்கமயில் மாறிவிடுவாள். இவ்வாறு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க பெருமைப்படுகிறேன். நேயர்களுக்கு மத்தியில் மிகவும் பிராபலமாக இத்தொடர் விளங்குகிறது. இத்தொடர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து ரசிகர்கள் தரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மேலும் கடுமையாக உழைப்பேன் என்று பெருமிதம் கொள்கிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் இத்தொடரின் கதாநாயகன் ஷிவ் சதிஷ். நடிக்க கற்றுக்கொண்டதை போல படப்பிடிப்பில் உள்ள நுட்பங்களையும் தெரிந்துக் கொண்டேன். இத்தொடரில் பணியாற்றும் அனைவரும் ஒரு நட்புடனே பழகி வருகிறோம். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் உற்சாகமாக பணியாற்றுவோம். மேலும் பல திருப்பங்களுடன் இத்தொடர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்த வெற்றிக்கு இதுவரை ரசிகர்கள் அளித்த ஆதரவே காரணம், என ஷிவ் சதிஷ் கூறுகிறார்.