இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சின்னத்திரை நடிகையான சமீரா ஷெரீப் தனக்கு வருகின்ற நெகட்டிவான கமெண்டுகளுக்கான இண்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மற்றும் ஜி தமிழின் றெக்கைகட்டி பறக்குது மனசு தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீப். இவர் பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இதனை தொடர்ந்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதற்கு நெகட்டிவான கமெண்டுகளை கொடுத்து வந்த நெட்டிசன்களை, சமீரா பல முறை வார்னிங் செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் கர்ப்பமான வயிறுடன் புகைப்படம் போடுவதை சிலர் குறை கூறியுள்ளார். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சமீரா, "இது என்னோட பேபி... என்னோட பம்ப் ... இஷ்டம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கண்களை மூடிக் கொள்ளுங்கள்." என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.