செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடரின் மூலம் பிரபலமானவர் அன்ஷிதா. இவருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் இடையே காதல் இருப்பதாக பல வதந்திகள் கிளம்பியது. பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அர்னவ் - அன்ஷிதா ஜோடியாக நுழைய பலர் அதை உறுதியே செய்துவிட்டனர். இது ஒருபுறமிருக்க பிக்பாஸ் வீட்டிற்குள்ளோ விஷாலை அன்ஷிதா காதலிப்பதாக ஒரு டிராமாவை நடத்தினார். பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆன போதும் விஷாலின் காதில் அன்ஷிதா ரகசியமாக எதையோ சொல்ல, அவர் ஐ லவ் யூ தான் சொல்லியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அன்ஷிதா, நான் விஷால் காதில் ஐ லவ் யூ சொல்லவில்லை. எனது எக்ஸ் காதலர் பெயரை தான் சொன்னேன். ஆனால், அது அர்னவின் பெயரும் இல்லை என கூறியுள்ளார்.