மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் |
பிரபல வீஜே பாவனா பல்வேறு டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் பல்வேறு எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாவனாவுக்கு மிகப்பெரும் புகழையும் பிரபலத்தையும் தந்தது. விஜய் டிவியிலிருந்து வெளியேறிய பாவனா தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கிரிக்கெட் வர்ணனையாளராக அசத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கலாய்ப்பது போல் வீடியோ மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாவனா, கிரிக்கெட் வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் ஆகியோரும் வாய்க்கு வந்ததை பாடுகின்றனர். அந்த பதிவில் 'சூப்பர் சிங்கர் ஆடிஷன், ஐபிஎல் எடிஷன்' என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அதைபார்க்கும் ரசிகர்கள் பலரும் 'சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமா பிரபலமாகிட்டு இப்ப அதையே கலாய்க்குறீங்களே' என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர். பாவனா இதை ஜாலிக்காக தான் செய்தார் என்றாலும், விஜய் டிவியிலிருந்து விலகிய போது தனது அதிருப்தியை மறைமுகமாக தெரிவித்திருதார். எனவே, இப்போது அவர் அந்த கோபத்தில் தான் விஜய் டிவி நிகழ்ச்சியை கலாய்த்துள்ளார் என சின்னத்திரை வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.