தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு |

விஜய் டிவி, பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். சன் டிவியின் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து 'சுமங்கலி', 'லெட்சுமி வந்தாச்சு' ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதற்கிடையில், திவ்யா கணேஷூக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷூக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. ஆனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது திருமணம் நின்றது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த அவர், அந்த மோசமான தருணங்களை மிகவும் கஷ்டப்பட்டு கடந்து வருவதாகவும், தன்னை புரிந்துகொள்ளும் ஒரு பார்டனர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய திவ்யா தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க, திவ்யா கணேஷ் 'மிக விரைவில்' என பதில் அளித்துள்ளார். ஆக மொத்தம் அம்மணிக்கு பார்ட்னர் கிடைச்சாச்சு அது யாரென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.