அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

தமிழில் அயலான், இந்தியன்-2 படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் ஹிந்தியில் அட்டாக், மேடே, தேங்க்காட், டாக்டர் ஜி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே காண்டம் சம்பந்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய படத்திலும் நடிப்பதாக இருந்தார்.
இந்த படத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பலரும் மறுத்தபோதிலும் ரகுல் பிரீத் சிங் துணிச்சலாக நடிக்க சம்மதித்தார். இந்தபடத்தின் கதைப்படி ஒரு பிரபல நிறுவனம் காண்டம்களை தயாரித்து அதை இளம் பெண்களிடம் கொடுத்து பரிசோதனை செய்வது போன்று இருந்தது. இப்படியொரு காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் நடிக்கத்தான் ஓகே சொல்லியிருந்தார் ரகுல். ஆனால் இப்போது இந்த படத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயம் படம் வெளியாகும் சமயத்தில் பிரச்னைகள் எழும் என்பதால் தேவையில்லாத வீண் சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என எண்ணி இப்போதே படத்தை எடுக்க வேண்டாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபோன்ற ஒரு படத்தை தயாரிப்பதற்கு காண்டம் நிறுவனங்களே எதிர்ப்பு தெரிவித்து விட்டன. அதனால் அந்த படத்தை தயாரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




