பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 5வது சீசன் அடுத்த மாதமோ அல்லது செப்டம்பர் மாதமோ ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நான்கு சீசன்களாக 'டாஸ்க்' என்ற பெயரில் சில பல அபத்தமான 'டாஸ்க்'குகளும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. சுவாரசியமில்லாத அம்மாதிரியான நிகழ்வுகளுக்கு வர உள்ள புதிய சீசனில் 'குட்பை' சொல்ல உள்ளார்களாம்.
சில பல புதிய நிகழ்வுகளை வர உள்ள 5வது சீசனில் வைக்க வேண்டும் என கிரியேட்டிவ் குழுவினர் மூளையைப் போட்டு கசக்கி வருகிறார்களாம். நிகழ்ச்சி முந்தைய நான்கு சீசன்களை விட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் தயாரிப்புக் குழு. எனவே, நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டையும் இந்த வருடம் இரு மடங்காக உயர்த்தி உள்ளார்களாம்.
கடந்த நான்காவது சீசனில் சினிமா பிரபலங்களை விட டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருந்தது. எனவே, வர உள்ள ஐந்தாவது சீசனில் சினிமா பிரபலங்கள் சிலர் கண்டிப்பாக இடம் பெற்றாக வேண்டும் என சேனல் தரப்பிலிருந்தும் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் வீடு மட்டும் வழக்கம் போல புதுப் பொலிவுடன் இருந்தால் போதாது, நிகழ்ச்சிக்குள்ளும் புதுப் பொலிவு வேண்டும் என்பதுதான் இந்த வருட டார்கெட் என்கிறார்கள்.