என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் சினிமாவின் நம்பர் 1 வசூல் நாயகனாக உயர்ந்திருக்கும் விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த 'மாஸ்டர்' படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் அவருக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர்.
விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் தன்னுடைய 66வது படத்தில் நடிக்கப் போகிறார். இதற்கடுத்து உருவாக உள்ள 67வது படத்தையும் தெலுங்குத் தயாரிப்பாளர் தான் தயாரிக்கப் போவதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இது குறித்து விஜய்யிடம் பேசிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
விஜய் திடீரென தெலுங்குத் தயாரிப்பாளர்கள் பக்கம் தாவுவது குறித்து தமிழ்த் தயாரிப்பாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனராம். விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர்தான் அவரை தெலுங்குப் பக்கம் அழைத்துப் போவதாகச் சொல்கிறார்கள்.
விஜய்யைப் போலவே நடிகர் தனுஷ், இயக்குனர் ஷங்கர் ஆகியோரது அடுத்த படங்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்களே தயாரிக்கப் போகிறார்கள்.