தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

2018ல் வெளிவந்த கன்னடப் படமான 'கேஜிஎப்' தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தை முதலில் ஜுலை 16ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை.
படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். முதல் பாகம் வெளியானதைப் போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் சென்டிமென்ட்டாக முதல் பாகத்தை பெரிய அளவில் பேச வைத்தது போல இரண்டாம் பாகத்தையும் பேச வைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறதாம்.
தற்போது சில மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் வழக்கம் போல வர இன்னும் சில வாரங்கள் ஆகும். எனவே, கிறிஸ்துமஸ் விடுமுறை என்பது பல விதங்களிலும படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.