பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட், கடந்த ஆண்டில் இருந்தே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளை செய்து மக்களின் மனதில் ஒரு ரியல் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இதனால் அவரது உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து வணங்கும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலையின்போதும் தன்னிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் உதவி செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார் சோனு சூட். இப்படியான நிலையில் தற்போது அவரது வீடு தேடிச் சென்றும் பொதுமக்கள் உதவிகேட்டு வருகிறார்கள். அந்த வகையில், சோனு சூட்டின் வீட்டிற்கு உதவி கேட்க சென்றவரோ இல்லை அவர் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவரோ தெரியவில்லை. ஒருவர் அவரது காலில் விழுந்து வணங்கும் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




