அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
சென்னை தனியார் பள்ளியில் மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் புகாரை அடுத்து அது போன்ற சம்பவங்கள் தங்களுக்கும் நிகழ்ந்ததாக பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 96, கர்ணன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ள கவுரி கிஷனும் பள்ளியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவாகரத்தை கேள்விப்பட்டபோது, அடையாறில் நான் படித்த பள்ளியிலும் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்தது ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. நான் மட்டுமல்ல, என்னுடைய பல தோழிகளுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறியும் கேட்டுள்ளேன். அங்கு படித்தபோது சில ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை சுட்டிக்காட்டி பேசுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது. அவர்களின் குணாதிசயங்கள் பற்றி கேவலமாக பேசுவது என செயல்பட்டுள்ளார்கள். மேலும், மாணவர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வீண்வழி சுமத்தியும் வந்தார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை நான் இங்கே கூற விரும்பவில்லை. அதேசமயம் பாதிப்புக்கு ஆளான மாணவிகள் உடனுக்குடன் இதுபற்றி வெளியே தெரியப்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.. நமக்கு அடுத்த தலைமுறை மாணவர்களாவது நல்ல ஆரோக்கியாமான சூழலில் பயமில்லாமல் கல்வி கற்கும் சூழல் உருவாகும் என தான் படித்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் கவுரி கிஷன்.