ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
2016ல் ரிசப் ஷெட்டி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமான கன்னட படமான கிரிக் பார்ட்டி ஹிட்டடித்தது. அதையடுத்து இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தனர். ஆனால் அங்கு தோல்வியடைந்தது. இந்தநிலையில் தற்போது அப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யும் முயற்சி நடக்கிறது. கார்த்திக் ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். இதையடுத்து அப்படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகாவை அழைத்தபோது மறுத்து விட்டாராம்.
அதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛கிரிக் பார்ட்டி எனது முதல் படம் என்பதோடு முதல் ஹிட் படமாகவும் அமைந்தது. என்றாலும் ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. காரணம், ஏற்கனவே அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை நான் வெளிப்படுத்தி விட்டேன். மீண்டும் புதிதாக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஏற்கனவே நடித்ததைப்போன்று மீண்டும் நடித்தால் கிரிக் பார்ட்டியில் நடித்தது போலவே நடித்திருப்பதாக விமர்சிப்பார்கள். அதனால்தான் அப்படத்தின் ரீமேக் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ராஷ்மிகா, மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே தான் ஆசைப்படுவதாகவும்'' தெரிவித்துள்ளார்.