'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் |

கொரோனாவுக்கு நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று(மே 6) உயிரிழந்த நிலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் இந்நோய்க்கு பலியாகி இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் பரத்வாஜ் இசையில் வெளியான, ‛‛ஒவ்வொரு பூக்களுமே... பாடலில் மாற்றுத்திறனாளி பாடகர் கோமகனும் பாடி, நடித்திருந்தார். அந்தப்படம் தந்த வெளிச்சத்தால் தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவையும் நடத்தி வந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோமகன், இருவாரங்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் அவரது உடல்நிலை மேலும் பாதிப்படைய சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருதினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அவரது உயிர் பிரிந்தது.
![]() |
சினேகா இரங்கல்
ஆட்டோகிராப் படத்தில் நடித்த சினேகா இன்ஸ்டாகிராமில், ‛‛என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நல்நினைவு, "ஒவ்வொரு பூக்களுமே" பாடல். அந்நினைவின் அற்புதமான பங்கு வகித்தவர் அன்பு சகோதரர் கோமகன்! அவரின் மறைவு மிகுந்த துயரளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும் குழுவிற்கும் அனுதாபங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்து வருவது திரையுலகினர் இடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.