டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் புதுமையாக திரைப்பட நட்சத்திரங்கள் தாங்கள் எந்த வாக்குசாவடியில் எத்தனை மணிக்கு ஓட்டளிக்க இருக்கிறோம் என்பதை முன்னதாகவே அறிவித்து விட்டார்கள்.
அஜித் இன்று அதிகாலையிலேயே திருவான்மியூர் குப்பம் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைந்துள்ள ஓட்டுச் சாவடிக்கு ஓட்டளிக்க வந்தார். அஜித்தின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அஜித் அவர்களை சைகையால் வெளியில் போகச் சொன்னார். பின்னர் வந்த போலீசார் கூட்டத்தை விலக்கி ரசிகர்களை வெளியேற்றி கேட்டை பூட்டினார்கள்.
பின்னர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் காத்திருந்தபோது ஒரு ரசிகர் செல்பி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது அவருடைய போனை பறித்துவிட்டார். அஜித்தின் இந்தச் செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ரசிகரை அழைத்த அஜித், அவரை அருகில் அழைத்து செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு, இதுபோன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறினார். ஓட்டளித்து விட்டீர்களா என்று அந்த இளைஞரை கேட்டார். அதற்கு அந்த இளைஞர் இல்லை என்று சொல்வே. முதலில் அந்த கடமையை முடியுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வெளியில் வந்த அஜித் பொதுமக்கள், ரசிகர்கள் பத்திரிகையாளர்களை பார்த்து சாரி... சாரி... என்று திரும்ப திரும்ப கூறியபடியே கிளம்பிச் சென்றார்.




