இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப்சீரிஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இத்தொடரில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருந்தார் அஷ்வின் காகுமானு.
அவர் கூறுகையில், லைவ் டெலிகாஸ்ட் எனது கதாப்பத்திரம் குறித்து ரசிகர்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தனை புகழும் இயக்குநர் வெங்கட்பிரபுவையே சேரும். மங்காத்தா படம் முடிந்து 10 வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு வெங்கட் பிரபு உடன் இணையும் இரண்டாவது படைப்பு இதுவாகும். இத்தொடரை சிறப்பாக மாற்றிய, என்னுடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
தற்போது அஷ்வின் காகுமானு இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன், பீட்சா 3 படத்தில் நடித்து வருகிறார்.