எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு |
'மாரி 2' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் வெளியான நாளிலிருந்தே யு டியுபில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1 பில்லியன் பார்வைகளைக் கடந்து இந்திய அளவில் 5வது இடத்திலும், தென்னிந்திய அளவில் முதலிடத்திலும் அப்பாடல் உள்ளது.
அப்பாடலின் வரவேற்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், சாய் பல்லவியின் நடனமும் முக்கிய காரணமாக அமைந்தது. தனுஷ் உடன் இணைந்து சாய் பல்லவி அசத்தலான நடன அசைவுகளைக் கொடுத்த பாடல் அது. இன்னும் சிலரோ தனுஷை விட சாய் பல்லவி மிகப் பிரமாதமாக நடனமாடினார் என்றார்கள்.
இப்போது சாய் பல்லவியின் அடுத்த அசத்தல் டான்ஸ் ஆக சேகர் கம்முலா இயக்கியுள்ள 'லவ் ஸ்டோரி' படத்தில் இடம் பெற்றுள்ள 'சாரங்க தரியா' பாடல் இருக்கப் போகிறது. அப்பாடலின் லிரிக் வீடியோ கடந்த வாரம் வெளியானது. அதற்குள் 17 மில்லியன் பார்வைகளை அந்தப் பாடல் கடந்துள்ளது. லிரிக் வீடியோவாக இருந்தாலும் இடையிடையே பாடலின் ஒரிஜனல் காட்சிகளையும் சேர்த்துள்ளார்கள். அதில் தன் இடையை வளைத்து, நெளித்து ஆடும் சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது. இன்னும் பாடல் வீடியோ வெளிவந்தால் அது 'ரவுடி பேபி' சாதனைக்குப் போட்டியாகவும் அமையும்.
ஏற்கெனவே, சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்த 'பிடா' படத்தில் சாய் பல்லவி நடனமாடிய 'வச்சிந்தே' பாடல் யு டியுபில் 292 மில்லியன் சாதனைகளைப் பெற்றது. 'ரவுடி பேபி' பாடல் வரும் வரை அந்தப் பாடல்தான் தென்னிந்திய அளவில் யு டியுபில் முதலிடத்தில் இருந்தது. இப்போது 'சாரங்க தரியா' பாடல் மூலம் மீண்டும் யு டியுபில் அசத்த உள்ளார் சாய் பல்லவி.