திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? |
நடிகர் விமலின் மனைவி அக்ஷயா சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், விமல் மீது தஞ்சையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகாரில், மன்னர் வகையறா படத்தை தயாரிக்க, தனது வீட்டை அடமானம் வைத்து விமலுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்தப் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி விட்டதாகவும், தற்போது தான் நடுத்தெருவில் நிற்பதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விமல் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என் மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.
திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்” என விமல் கூறி இருக்கிறார்.