Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் 'மாஸ்டர்' வெற்றி : நன்றி தெரிவித்த விஜய்

21 ஜன, 2021 - 18:16 IST
எழுத்தின் அளவு:
Vijay-thanks-for-master-success-in-telugu

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் கடந்த வாரம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் கர்நாடகவிலும் இப்படம் தெலுங்கிலும் வெளியானது.

தெலுங்கில் சுமார் 9 கோடிக்கு விற்கப்பட்ட படம் 22 கோடி வரை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். இதர செலவுகள் போக படத்தின் நிகர வசூல் 13 கோடி. இதன் காரணமாக இதுவரையிலும் சுமார் 4 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேரடித் தெலுங்குப் படங்களுக்குப் போட்டியாக இந்த அளவிற்கு 'மாஸ்டர்' தெலுங்கில் வசூலித்தது பெரிய விஷயம் என்கிறார்கள்.

இப்படத்தைத் தெலுங்கில் வெளியிட்ட மகேஷ் கொனேரு இன்று விஜய்யை சந்தித்து தெலுங்கு வசூல் நிலவரம் குறித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி மகேஷ் டுவிட்டரில், “எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக விஜய்யை சந்தித்து 'மாஸ்டர்' படத்தின் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்தேன். தெலுங்கு மாநிலங்களில் திரைப்பட ரசிகர்கள் அன்பு செலுத்தியதற்கு விஜய் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களில் இனி விஜய்யின் படங்கள் மற்ற தமிழ் நடிகர்களை விடவும் பெரிய வியாபாரத்தை நோக்கிப் பயணிக்க 'மாஸ்டர்' வெற்றி உதவியுள்ளதாக கோலிவுட் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சோனு சூட்டின் மனு தள்ளுபடிசோனு சூட்டின் மனு தள்ளுபடி புதிய படத்திற்கு தயாராகும் அனுஷ்கா புதிய படத்திற்கு தயாராகும் அனுஷ்கா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamil - chennai,இந்தியா
22 ஜன, 2021 - 10:02 Report Abuse
Tamil ஹிந்தி ரசிகர்களும் விஜய் படங்களை பார்ப்பது அதிகரித்துள்ளத. அணைத்து ரசிகர்களுக்கும் ஏற்ற கதைகளில் நடிப்பது நல்லது. மாஸ்டர் படம் எதிர்பார்த்த பார்த்த அளவு இல்லை என்பதுதான் உண்மை, நல்ல கதை மற்றும் திரைக்கதை விறுவிறுப்பாக இருத்தல் வேண்டும், கைதி தவிர்த்து மிரசல் மற்றும் பீகிள் போன்று படங்களில் சில சினிமாத்தனமான சீன் தவிர்த்து மற்றவை அனைத்தும் நன்றாக இருந்தது.ஹீரோ ஹீரோயின் வில்லன் பங்கு கதைக்கு வலுசேர்ப்பதாக இருக்கவேண்டும், இரண்டரை மணிநேரம் படத்தை முடிப்பது நல்லது செலவும் மிச்சமாகும். தமிழ் padathirku ஒரு நல்ல டைரக்டர் கிடைத்துள்ளார் நடிகர்களுக்காக கதை எழுதாமல் இன்னும் முயற்சி செய்தால் ஹாலிவுட் நிகராக தமிழ் திரைப்படங்களை எடுத்து செல்லலாம். கதை, திரைக்கதை இன்றி சீன் போட்டால் படம் ஓடாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in