பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

எழுத்தாளர் கல்கி சினிமாவிற்காகவே எழுதிய கதை 'கள்வனின் காதலி'. அந்தக் காலத்தில் வாழ்ந்த தஞ்சாவூர் கொள்ளைக்காரனின் நிஜ வாழ்க்கைக் கதையால் ஈர்க்கப்பட்டு, இந்த கதையை எழுதினார்.
பின்னர் இந்த கதை அவர் பணியாற்றிய பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. நல்ல வரவேற்பையும் பெற்றது. பின்னர் நாவலாக வெளிவந்தது, நாடகமாக நடத்தப்பட்டது, எல்லாவற்றிலும் வெற்றி பெற்றது.
இந்த கதையை படமாக்க பலர் விரும்பினாலும் ஏனோ அது நடக்காமலேயே இருந்தது. கடைசியாக, 1955ம் ஆண்டில் தனது ரேவதி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.எஸ்.ராகவன்(நடிகர் ராகவன் அல்ல) படத்தை தொடங்கினார்.
சிவாஜி கணேசன் கள்வனாகவும், பானுமதி அவரது காதலியாகவும் நடித்தனர். இவர்களுடன், டி. ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி, டி. எஸ். துரைராஜ், குசலகுமாரி, எஸ். ஆர். ஜானகி, டி. பாலசுப்பிரமணியம் மற்றும் கே. ஆர். செல்லம் ஆகியோர் நடித்தனர்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடனாக மாறியவனுக்கும், கட்டாய திருமணத்திற்காக வற்புறுத்தப்படும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான காதலை சொன்ன படம். கல்கியின் கதையை அடிப்படையாகக் கொண்டு, வசனம் எழுதியவர் தமிழ் எழுத்தாளர் எஸ்.டி. சுந்தரம். கண்டசாலா கோவிந்தராஜுலு நாயுடு இசை அமைத்தனர்.
எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி தான் எழுதிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படமாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் சினிமாவுக்கென்றே எழுதிய 'கள்வனின் காதலி' சினிமாவாக வேண்டும், அதை திரையில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் 'கள்வனின் காதலி' வெளியாகும் முன்பே அவர் மறைந்து விட்டார்.