மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாடல்களின் உரிமையை வைத்திருக்கும் சோனி மியூசிக் நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் ஆகியோர் தரப்புகளில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.
பலகட்ட விசாரணைக்கு பிறகு, இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது இளையராஜா தரப்பு, ''நான் இசையமைக்கும் படங்களில் இடம்பெறும் பாடல்களின் உரிமையை எப்போதும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை. படத்தின் ஒட்டுமொத்த உரிமை தயாரிப்பாளரிடம் இருந்தாலும் தனியாக பாடல்களை விற்க உரிமை இல்லை. இசையமைப்பாளர் அனுமதியின்றி பாடலை மாற்றி வெளியிடுவது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். பதிப்புரிமை சட்டப்படி இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமை உள்ளது'' என வாதிட்டது.
பின்னர், தயாரிப்பாளர் தரப்பு, சோனி நிறுவனம் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.