டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பி.ஆர் டாக்கீஸ் கார்பரேஷன் சார்பில் ராஜபாண்டியன், பாஸ்கரன், டேங்கி இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புதுமுகம் சுரேஷ் ரவியுடன் யோகி பாபுவும் இணை நாயகனாக நடிக்கிறார். தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார்.
கே.பாலய்யா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: கிராமத்து பின்னணியில், கலக்கலான பேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக உருவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. என்றார்.