படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' |

ரஜினியின் ‛கூலி' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நாகார்ஜுனா, தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே அவரது 100வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.கார்த்திக் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது. நாகார்ஜூனா தயாரித்து நடிக்கும் இந்த அவரது நூறாவது படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள்.
அதில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மற்ற இரண்டு நடிகைகளில் ஒருவர் அவரது மனைவியாகவும், மற்றொருவர் முக்கிய கதாநாயகியாகவும் நடிக்கிறார். அந்த இரண்டு பேரில் ஒருவராக தற்போது சுஷ்மிதா பட் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த ‛லவ் மேரேஜ்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு நாயகியாக நடிக்க ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.