சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

'பிரேமம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். சமீப காலமாகவே அவர் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் கடந்த இரண்டு மாதங்களில் அவரது நடிப்பில் 'பர்தா, கிஷ்கிந்தாபுரி' மற்றும் தமிழில் தற்போது 'பைசன்' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் பார்த்த தெலுங்கு நடிகை கோமலி பிரசாத் என்பவர் அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பு குறித்து பாராட்டி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “வித்தியாசமான கதாபாத்திரங்களை தங்களது திறமையால் பொருத்திக் கொள்ளும் எண்பதுகளின் கதாநாயகிகளை மிஸ் பண்ணுகிறேன். அனுபமா பரமேஸ்வரன் அப்படிப்பட்ட ஒரு கதாநாயகி. இந்திய திரையுலகம் அவருக்கு என நிறைய வலிமையான கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும். பைசன் படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் தனித்துவமாகவும் கைதட்டி பாராட்டும் விதமாகவும் இருக்கிறது” என்று பாராட்டி உள்ளார்.