தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை பட பாடல் வெளியீட்டுவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அதை தொடர்ந்து கோவையில் நடந்த பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் தனுஷ் கலந்து கொண்டு பேசினார். அடுத்து திருச்சி, மதுரை, மற்ற மாநில பிரமோசன்களுக்கும் செல்ல உள்ளார். சமீபத்தில் எந்த படத்துக்கும் இப்படி தனுஷ் பிரமோசன் செய்தது இல்லை, ஏனிந்த மாற்றம் என்று கேட்டால், அவர் இயக்கி, நடிக்கும் படம் என்பதால் கூடுதல் பாசம்.
அவர் கடைசியாக நடித்த குபேரா படம் தெலுங்கில் ஹிட். ஆனால், தமிழில் ஓடவில்லை. இங்கே சரியான பப்ளிசிட்டி இல்லை. நீங்க அதை செய்து இருந்தால் மக்களிடம் படம் போய் சேர்ந்து இருக்கும், கூடுதல் டிக்கெட் விற்று இருக்கும் என்று சிலர் சொல்ல, இட்லி கடையில் அந்த தவறு நடக்க கூடாது என்று ஊர், ஊராக சென்று படத்தை விளம்பரப்படுத்த உள்ளார்.
ரசிகர்கள் அன்பை பெற, சில வாரங்களாக அவர்களை சந்தித்து விருந்து அளித்து போட்டோ எடுத்து வருகிறார். தனுஷை விட, சிவகார்த்திகேயன் மார்க்கெட், சம்பளம் அதிகரித்து வருகிறது. விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி 100கோடி வசூலை தாண்டியுள்ளது. அது அவருக்கு பிரஷர் ஆக மாற, தனது வெற்றியை உறுதிப்படுத்த இட்லி கடை மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார். இந்த படம் 200, 300 கோடி அளவுக்கு வசூலை அள்ள வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார் என்கிறார்கள்.