தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் |
மெய்யழகன் படத்தை அடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. இது தவிர வாத்தியார் மற்றும் சர்தார் 2 படத்திலும் நடிக்கும் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தொடரும்(துடரும்) என்ற படத்தை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கும் படத்திலும் அடுத்து கார்த்தி கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
தொடரும் படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், கார்த்தி நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கும் படமும் குடும்ப பிரச்சினை மையமாகக் கொண்ட கதையில்தான் உருவாகிறதாம். மேலும் கார்த்தியின் அண்ணனான சூர்யாவும் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேஷம் என்ற படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.