சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

2025ம் ஆண்டின் அரையாண்டில் 120க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. கடந்த இரண்டு வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் இந்த வாரம் மட்டும் 11 படங்கள் வரை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை படங்களுக்கும் எப்படி தியேட்டர்கள் கிடைத்து, அவற்றை மக்கள் எப்படி வந்து பார்ப்பார்கள் என்று திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களே யோசிக்காமல் இருக்கிறார்கள்.
'ஆக்நேயா, ஆக்கிரமிப்பு, பன் பட்டர் ஜாம், சென்ட்ரல், கெவி, ஜென்ம நட்சத்திரம், களம் புதிது, நாளை நமதே, டைட்டானிக், டிரெண்டிங், யாதும் அறியான்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வருடத்தில் வெளியான சிறிய படங்களில் பல படங்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டன. முன்னணி நடிகர்களின் படங்களை விட சிறிய படங்கள்தான் எதிர்பார்க்காத வெற்றியைக் கொடுத்துள்ளன. இந்த வாரம் வரும் படங்கள் சிறிய படங்கள்தான் என்றாலும் அவற்றிக்கான சரியான தியேட்டர்கள் கிடைப்பது முக்கியமானது.
கடந்த சில வருடங்களாகவே பட வெளியீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வாரம் இத்தனை படங்கள் அறிவித்துள்ள நிலையில் இனிமேலாவது அது குறித்து சம்பந்தப்பட்ட சங்கங்கள் யோசித்தாக வேண்டும்.