'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! | 'தனுஷ் 56' படத்தில் 'உறியடி' விஜய்குமார்? | 'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு |

சென்னை : வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது அனுமதியின்றி ‛சிவராத்திரி...' பாடலை பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போது வரும் புதிய படங்களின் பாடல்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ... பழைய படங்களின் பாடல்களை பயன்படுத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர். சமீபகாலமாக இந்த போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளும், வழக்கு பாய்வதும் தொடர்கிறது.
‛எனது அனுமதியின்றி எனது பாடல்களை பயன்படுத்தியதாக' சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக மலையாள படமான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற ‛கண்மணி அன்போடு காதலன்...' பாடல், அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற ‛ஒத்தரூபா தாரேன்...' பாடல் உள்ளிட்டவைகளுக்காக படக்குழு மீது நஷ்டஈடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து அவர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப்படம், இன்று(ஜூலை 11) ரிலீஸாகி உள்ளது.
இதில் கமல் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்'படத்திலிருந்து ‛சிவராத்திரி...' என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த படாலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதா தரப்பில் தெரிவிக்கின்றனர்.