டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடிகராகவும், தமிழில் இயக்குனராகவும் இருப்பவர் தனுஷ். அவரது இயக்கத்தில் 'ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது 'இட்லி கடை' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'குபேரா' இந்த வாரம் ஜுன் 20ம் தேதி பான் இந்தியா படமாக வெளி வருகிறது.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த 'குபேரா' டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் தனுஷ் பேசும்போது, பவன் கல்யாண் நடிக்கும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். தமிழில் மட்டுமே படங்களை இயக்கியுள்ள தனுஷ் தெலுங்கு படத்தை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருக்கிறார். 'ஹரிஹர வீர மல்லு, ஓஜி' படங்களில் நடித்து முடித்து 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அஜித் நடிக்க, தனுஷ் இயக்க ஒரு படம் உருவாக உள்ளதாக தமிழ் சினிமாவில் பரபரப்பு எழுந்தது.




