தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் தொடர்ந்து மோதல் முற்றி வருகிறது. பெப்சி அமைப்புக்கு எதிராக புதிதாக தொழிலாளர் சங்கம் ஒன்றை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்ற கூடாது, ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.
இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படப்பிடிப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெப்சிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
வழக்கின் மனுவில், "பெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளது. அதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறி பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்க மறுப்பது சட்ட விரோதமானது.
இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பு பணிகள் முற்றிலும் முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் முடித்துக் கொடுக்குமாறு பெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும்.
படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளில் தலையிட பெப்சிக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மே 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பெப்சி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.