லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'தேவரா' படம் வெளியானது. இதனை தொடர்ந்து முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜூனியர் என்டிஆர் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து 'வார் 2' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக நடித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸை நோக்கிய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் பல வருடங்களாக ஜூனியர் என்டிஆருக்கு சண்டை காட்சிகளில் டூப் போடும் நடிகரான ஈஸ்வர் ஹரிஷ் என்பவர் 'வார் 2' படத்தில் நான் பணியாற்றவில்லை என்கிற தகவலை தற்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஜூனியர் என்டிஆரின் பல படங்களில் நான் தான் அவருக்கு டூப்பாக நடித்துள்ளேன். 'வார் 2' படத்தில் நடித்துள்ள ஹிருத்திக் ரோஷனின் உடலமைப்புடன் ஒப்பிடும்போது சண்டை காட்சிகளில் ஜூனியர் என்டிஆரின் உடலமைப்பு சற்று குறைவு என்பதால் அதை சமன் செய்வதற்காக அந்த படத்தில் அவருக்கு டூப்பாக நடிக்க அழைக்கப்பட்டேன்.
ஆனால் அதற்காக அவர்கள் எனக்கு வழங்குவதாக சொன்ன ஊதியம், நான் ஹைதராபாத்தில் இருந்து மும்பை சென்று வரும் விமான செலவுகளுக்கே சரியாகப் போய்விடும். ஆனாலும் ஊதிய விஷயத்தில் சரியான உடன்பாடு எட்டப்படாததால் இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பல வருடங்களாக இவர் ஜூனியர் என்.டி.ஆரின் 'ஆர்ஆர்ஆர், தேவரா' உள்ளிட்ட படங்களில் டூப்பாக பணியாற்றி வந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் கூட இவரது சம்பள விஷயத்தில் தலையிட்டு ஏன் சமரசம் செய்து வைக்கவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பி வருகின்றனர்.