சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

புதுக்கோட்டை: மாணவனின் கோரிக்கையை ஏற்று, அறக்கட்டளை நிதியில் கிராமத்தில் அமைத்த குடிநீர் பிளான்டை, நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவன், தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 'என் ஊர் மக்கள் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று வருகின்றனர்; சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்' என, கோரிக்கை விடுத்தார்.
இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் உடனே தன் அறக்கட்டளை நிதியிலிருந்து, குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்துக் கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், ‛‛மாற்றம் அமைப்பின் மூலம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்கிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம ஒரு விஷயம் செய்யும்போது அதில் மகிழ்ச்சி இருக்கும். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்'' என்றார்.