பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் |

தமிழ் சினிமாவில் மலையாள தேசத்து நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்று மலையாள தேசத்து பாடகிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சின்னகுயில் சித்ரா, ஜென்ஸி போன்ற பல பாடகிகள் மலையாளத்தை விட தமிழிலேயே அதிகம் பாடி இருக்கிறார்கள். இந்த ஆதிக்கம் இப்போதல்ல 1940ளிலிருந்தே தொடங்குகிறது. இந்த காலத்தில் வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடி வருவதை போன்று அந்தக் காலத்தில் பாடியவர் வைக்கம் சரஸ்வதி.
கேரளாவில் மேடையில் கர்நாடக இசை பாடி வந்தவர் சரஸ்வதி. ஆல் இண்டியா ரேடியோவின் ஆஸ்தான பாடகியாகவும் இருந்தார். இவரது பாடல்கள் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தது. 1938ம் ஆண்டு வெளிவந்த 'நந்தகுமார் ' படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு 'ஸ்ரீவள்ளி' படத்தில் பாடினார். 'தன அமராவதி' உள்ளிட்ட பல படங்களில் பாடினார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும் ஏனோ தமிழில் தொடர்ந்து பாடவில்லை. மலையாள பாடல்களிலும், கர்நாடக இசை கச்சேரிகளிலுமே அதிக ஆர்வம் செலுத்தினார். இவரது சகோதரர்தான் மலையாள சினிமாவின் முன்னணி பாடகரான ராஜன்.