எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்க உள்ள படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்தார் பிரியங்கா. படத்திற்கான பேச்சுவார்த்தை, ஒப்பந்த வேலைகளுக்காக வந்தார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, இயக்குனர் ராஜமவுலி நேற்று சிங்கத்தின் புகைப்படம் ஒன்றின் முன் கையில் பாஸ்போர்ட் உடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருந்தனர். இதன் மூலம் பிரியங்கா இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இருவரது கமெண்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.