'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் |
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரெட்ட தல'. சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அவரது பெயருடன் கிரிஷ் என்பதைச் சேர்த்து கிரிஷ் திருக்குமரன் ஆக இப்படத்தை இயக்கி வருகிறார்.
அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி 2' படத்தை வெளியிட்ட பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இந்தப் படம். அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமானது. கோவா, புதுச்சேரி, தரங்கம்பாடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
தற்போது இந்தப் படத்திற்கான தனது டப்பிங் பணிகளை அருண் விஜய் முடித்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.