சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடி வசூல், 25 நாட்களைக் கடந்து ஓட்டம் என வெற்றிகரமான படமாக அமைந்துள்ளது.
ஆனால், இப்படம் மூலம் தனக்கு 'மன வேதனை' ஏற்பட்டுள்ளதாக இஞ்சினியரிங் மாணவர் வாகீசன் என்பவர் 'அமரன்' படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
படத்தில் சாய் பல்லவியின் தொலைபேசி எண் என மாணவர் வாகீசன் தற்போது பயன்படுத்தி வரும் தொலைபேசி எண் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தொலைபேசி எண் சாய் பல்லவியின் உண்மையான தொலைபேசி எண் என பல ரசிகர்கள் வாகீசனைத் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வருகிறார்களாம்.
அதனால் “சொல்ல முடியாத கஷ்டங்களையும், மன வேதனையையும் அனுபவிப்பதாக” அக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி 1 கோடியே 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும் கேட்டுள்ளார் வாகீசன்.
படம் வெளியானதிலிருந்து தன்னால் தூங்க முடியவில்லை, தினசரி வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது அன்றாட நடவடிக்கைகளை எந்தத் தொல்லையும் இல்லாமல் செய்ய முடியவில்லை. என்னால் வெளியில் செல்ல ஒரு காரைக் கூட பதிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது என்றும் சொல்கிறார் வாகீசன்.
இது குறித்து படம் வெளியான பின்பு அப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினரை வாகீசன் 'டேக்' செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். ஆனால், அதற்கு படக்குழு எந்த பதிலும் சொல்லாத காரணத்தால் தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
“படத்திலிருந்து உடனடியாக தன்னுடைய தொலைபேசி எண்ணை நீக்க வேண்டும். இந்த விவகாரத்திற்காக என்னுடைய தொலைபேசி எண்ணை மாற்ற விருப்பமில்லை. ஆதார், வங்கி, என்னுடைய படிப்பு சம்பந்தமாக அனைத்திலும் இந்த எண்தான் கொடுத்துள்ளேன்,” என்றும் வாகீசன் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிகர், நடிகையர் பயன்படுத்துவதாகக் காட்டப்படும் தொலைபேசி எண்ணை உண்மையான எண் என அழைக்கும் 'முட்டாள்' ரசிகர்கள் இங்கு உள்ளனரா என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.