கங்கை அமரன் அப்படி பேசலாமா? : ஜி.வி.பிரகாஷ் ஆதரவாக குரல்கள் | கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் |
2024 தீபாவளிக்கு தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்', கிரண் அப்பாவரம் நடித்த 'க' ஆகிய நேரடி தெலுங்குத் திரைப்படங்கள் வெளிவந்தன. அவற்றுடன் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆன 'அமரன்' படமும் வெளியானது.
சிவகார்த்திகேயன் நடித்த சில தமிழ்ப் படங்கள் ஏற்கெனவே தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. ஆனால், அவை பெரிய வசூலைக் குவித்ததில்லை. இந்நிலையில் 'அமரன்' படம் அங்கு வெளியான நேரடி தமிழ்ப் படங்களை விடவும் நல்ல வசூலைக் குவித்துள்ளது.
'அமரன்' படம் கடந்த 11 நாட்களில் சுமார் 30 கோடியும், 'லக்கி பாஸ்கர்' படமும் சுமார் 30 கோடியும், 'க' படம் சுமார் 25 கோடியும் வசூலித்துள்ளன. ஆனால், லாபத்தைப் பொறுத்தவரையில் 'அமரன்' படம்தான் மற்ற இரண்டு படங்களை விடவும் அதிகமாகத் தந்துள்ளது. சுமார் 12 கோடி வரையில் இதுவரையில் லாபம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த வருட தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்து முதலிடத்தைப் பிடித்தள்ளது. இந்த வாரமும் வசூல் நன்றாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம்.
அது மட்டுமல்ல தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி இந்த வருடம் வெளியான ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்', விஜய் நடித்த 'தி கோட்' படங்களை விடவும் 'அமரன்' வசூல் அதிகமாகி டப்பிங் படங்களின் வசூலிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது.