பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா |
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சான கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் 'லப்பர் பந்து'.
இப்படத்தில் இளையராஜாவின் இசையில் விஜயகாந்த் நடித்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலைப் பயன்படுத்தி இருந்தனர். படத்தின் நாயகன் தினேஷ் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்தப் பாடல் ஒலித்தது. படத்தின் ரசிப்புத்தன்மைக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது.
இந்நிலையில் படக்குழுவினரால் கடந்த வாரம் மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தற்போது இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். அவரது இசையில் உருவாகிய பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கு தொடர்வதும் சிலர் சர்ச்சையாக்கி வந்தனர்.
இளையராஜாவிடம் உரிய அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்திய படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்தது இளையராஜா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. படத் தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் இளையராஜாவை சந்தித்தனர்.