'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது நள்ளிரவு காட்சிகள், அதிகாலை காட்சிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசின் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ம் வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது சென்னையில் படம் பார்க்க வந்த 19 வயது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு அதிகாலை காட்சிகள், காலை 7 மணி, 8 மணி காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் விஜய் நடித்து இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் கோயம்பத்தூரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காலை 7 மணிக்கும், 7.40 மணிக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் அந்த காட்சிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த இடத்திலும் இப்படியான முன்பதிவு நடைபெறவில்லை. அப்படியிருக்க அந்த குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் எந்தவிதமான அரசு அனுமதி பெற்று இப்படி முன்பதிவு செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.




