சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. வரும் ஜூன் 27ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முன்பதிவால் டாக்டர் ராஜசேகரின் படத்திற்கும் எதிர்பாராத விதமாக ஜாக்பாட் அடித்துள்ளது.
விஷயம் என்னவென்றால் பிரபாஸின் படத்திற்கு 'கல்கி 2898 ஏடி' என டைட்டில் வைக்கப்பட்டாலும் ரசிகர்கள் அனைவருமே அதை கல்கி என்று மட்டுமே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2019ல் டாக்டர் ராஜசேகர் நடிப்பில் ஹனுமான் படை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் கல்கி என்கிற படம் வெளியானது. இந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபாஸின் கல்கி படம் வெளியான மறுநாள் அதாவது ஜூன் 28ஆம் தேதி இந்த படத்தை ரீ ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
ரசிகர்கள் தற்போது ஆவலாக பிரபாஸின் கல்கி படத்திற்கு முன்பதிவு செய்யும்போது பலர் கல்கி என்ற பெயரை பார்த்ததுமே பதிவு செய்ததால் அதில் பல பேர் தவறுதலாக டாக்டர் ராஜசேகரின் கல்கி படத்திற்கு முன்பதிவு செய்து விட்டனர். அந்த வகையில் கிட்டத்தட்ட பத்து திரையரங்குகளில் டாக்டர் ராஜசேகரின் கல்கி படம் ஹவுஸ்புல் புக்கிங் ஆகியுள்ளது. இன்னும் சில திரையரங்குகளில் புக்கிங் போய்க்கொண்டிருக்கிறது.
ஆனால் புக்கிங் செய்த பிறகு இந்த தவறைக் கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள் தங்களுக்கு பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள கல்கி படத்திற்காக இந்த டிக்கெட்டுகளை மாற்றி தருமாறு தனியார் புக்கிங் இணையதளத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் ராஜசேகரின் கல்கி பட தயாரிப்பாளர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே தனது படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் என்று அவர் மீதும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் டாக்டர் ராஜசேகர் தனது படத்திற்கான புக்கிங் குறித்து தானே எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் இந்த குழப்பத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பிரபாஸ் உள்ளிட்ட கல்கி படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.