'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இதன் முன்தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அந்தமான் தீவில் தொடங்குகிறது.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இப்போது இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நாசர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.