சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

அன்னபூரணி படத்தையடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடாவன் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தன்னைவிட வயது குறைவான ஒரு இளைஞனை ஒரு பெண் காதலிப்பதும், இந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களுக்கிடையே திருமணத்திற்கு பிறகு நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. அதன் காரணமாகவே தற்போது 39 வயதாகும் நயன்தாராவையும், 33 வயதாகும் கவினையும் இப்படத்தில் ஜோடி சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.