கைது செய்ய வந்த போலீசார் என்னுடன் மது அருந்தி விட்டு சென்றார்கள் ; ராம்கோபால் வர்மா கிண்டல் | ஏர்போர்ட்டில் தடையின்றி செல்ல தந்தையின் சலுகைகளை ரன்யா ராவ் பயன்படுத்தினார் ; அறிக்கை சமர்ப்பிப்பு | சூர்யா வீட்டில் நட்சத்திர பார்ட்டி ; திரிஷா ஆஜர் | எம்புரான் சர்ச்சை குறித்து கருத்து சொல்ல சுரேஷ்கோபி மறுப்பு | முதல் முறையாக இரண்டு வேடங்களில் அல்லு அர்ஜுன் | குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து |
உறியடி, உறியடி 2 படங்கள் மூலம் பிரபலமானார் நடிகரும், இயக்குனருமான விஜயகுமார். கடைசியாக பைட் கிளப் படத்தில் நடித்தார். இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் 'எலக்சன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி இப்படம் தயாராகி உள்ளது. இதை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற மே 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.