Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேத்தனை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே பூட்டி வையுங்கள்: சூரி கோரிக்கை

07 ஏப், 2024 - 18:23 IST
எழுத்தின் அளவு:
Lock-Chetan-indoors-for-a-week:-Soori-demands


வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சமீபத்தில் சர்வதேச திரைப்படம் விழா ஒன்றில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்த கவுதம் மேனன் மற்றும் சேத்தன் இருவருமே தங்களது நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றனர். குறிப்பாக ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியாக சேத்தனின் நடிப்பு படம் பார்த்த ரசிகர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூரி பேசும்போது, “இந்த இரண்டாம் பாகத்தில் சேத்தனின் அட்ராசிட்டி இன்னும் அதிகமாக இருக்கும். தயவு செய்து படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒரு வாரம் அவரை வெளியில் எங்கும் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைக்குமாறு அவரது வீட்டாரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜாலியாக ஒரு கோரிக்கை விடுத்தார் சூரி. அந்த அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்திலும் சேத்தனின் கதாபாத்திரம் இன்னும் வலுவாக இடம் பெற்றுள்ளதாக சூரியின் பேச்சிலிருந்து தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டாவது படத்தை கன்னடத்தில் தயாரிக்கும் தோனிஇரண்டாவது படத்தை கன்னடத்தில் ... 'இந்தியன் 2, வேட்டையன்' அடுத்து 'விடாமுயற்சி' அறிவிப்பு வருமா? 'இந்தியன் 2, வேட்டையன்' அடுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ram - mayiladuthurai,இந்தியா
09 ஏப், 2024 - 10:44 Report Abuse
ram சேத்தன் இல்ல சூரி, வெற்றிமாறன் எல்லோரும் தலை மறைவாய் இருங்க, சாதிக் பாஷா வழக்கில் விசாரணை தீவிரமா இருக்குது. போதை பொருள் வித்த காசில் படம்,
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
08 ஏப், 2024 - 12:55 Report Abuse
ram பைனான்ஸ் சாதிக் பாஷா போல
Rate this:
Raj Kamal - Thiruvallur,இந்தியா
12 ஏப், 2024 - 10:35Report Abuse
Raj Kamalநீயே கமெண்டும் போட்டு, அதுக்கு நீயே லைக்கும் போட்டு அத பாத்து நீயே சிரிச்சுக்க வேண்டியதுதான். என்ன கொடுமை சரவணா இது?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in