Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரத்பாபுவைத் திருமணம் செய்து கொள்ள இருந்தேன் - நடிகை ஜெயலலிதா

10 மார், 2024 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Jayalalitha-wanted-to-have-a-child-with-Sarath-Babu


செய்தித் தலைப்பில் உள்ள நடிகை ஜெயலலிதா என்பதைப் பார்த்து படிப்பவர்கள் குழப்பமடைய வேண்டாம். இவர் தெலுங்கு நடிகை ஜெயலலிதா. கமல்ஹாசன் நடித்து தெலுங்கில் வந்த 'இந்துருடு சந்துருடு' படத்தில் அவர் ஜோடியாக நடித்தவர். அப்படம் தமிழில் 'இந்திரன் சந்திரன்' என்ற பெயரில் டப்பிங் ஆகியும் வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் ஜெயலலிதா. தமிழில் விஜயகாந்த் நடித்த 'பெரிய மருது', அஜித் நடித்த 'அவள் வருவாளா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சில விஷயங்களைப் பேசியுள்ளார். “நான் சரத்பாபுவைக் காதலித்தேன். அவரது வாழ்க்கையின் கடைசி காலத்தில் நான் அவருடன் இருந்தேன். நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அவர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பினேன். இருந்தாலும் திரையுலகத்தில் செல்வாக்கு மிக்க சிலர் எங்களது திருமணம் நடைபெறவிடாமல் தடுத்தனர். நாங்கள் ஒன்றாக பல பயணங்களுக்குச் சென்றோம். எனது வாழ்க்கையில் என்னுடன் எப்போதும் இருக்க ஒரு வழிகாட்டி, ஒரு துணை எனக்கு தெய்வ சக்தியால் வந்தது என்று நம்பினேன். அவர் நல்லவராக, விதிவிலக்கானவராக இருந்தார். நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்திருந்தோம். எங்களது ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

மறைந்த நடிகர் சரத்பாபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர். உடல்நலக்குறைவால் கடந்த வருடம் மறைந்தார். தெலுங்கு நடிகை ரமாபிரபாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார். அவரைப் பிரிந்த பின்பு, வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்து கொண்டார் சரத்பாபு. சில வருடங்களுக்குப் பிறகு அவர்களும் பிரிந்தனர். தற்போது சரத்பாபுவுடன் தான் ஒன்றாக வசித்தது பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். சரத்பாபு மறைந்து இத்தனை மாதங்கள் ஆன பிறகே அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தியின் 26வது படம் துவக்கம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு நலன் குமாரசாமி இயக்குகிறார்கார்த்தியின் 26வது படம் துவக்கம்: 8 ... ஹிந்தி படம் நிறைவு; ஜப்பானில் நடந்த பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி ஹிந்தி படம் நிறைவு; ஜப்பானில் நடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sck -  ( Posted via: Dinamalar Android App )
10 மார், 2024 - 22:06 Report Abuse
Sck பசை நிறையா இருந்தா போதும், எங்க இருந்துதான் பறந்து வருவாளுங்களோ? அதுவும் பெண் கூத்தாடிகள் கேட்கவே வேண்டாம்.
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
10 மார், 2024 - 18:33 Report Abuse
R S BALA நல்ல யோகக்காரர்தான் பாபுகாரு..
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
10 மார், 2024 - 15:06 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan ரொம்ப சந்தோஷம்.
Rate this:
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10 மார், 2024 - 14:49 Report Abuse
Anantharaman Srinivasan நடிகன் என்றவுடன் கோழிகள் நெருப்பில் விழுவதுபோல் விழுந்து அவனுடன் சிலகாலம் மயங்கி வாழ்கின்றன.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in