இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
முன்னணி மாடல் அழகியாகவும், நடன கலைஞராகவும் இருப்பவர் சிம்ரன் குப்தா. 2014ம் ஆண்டு 'டிடி நேஷனல்' டிவி நடத்திய நடன நிகழ்ச்சியில் டைட்டில் வென்றதன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பேஷன் ஷோக்களிலும், நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்று வந்தார். விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் 'சிம்டாங்காரன்' பாடலில் விஜய்யுடன் நடனமாடினார். அதன்பிறகு 'அன்வேஷி' என்ற தெலுங்கு படத்திலும், 'ஜஹான் சார் யார்' என்ற இந்தி படத்திலும் நடித்தார். தற்போது முதன் முறையாக 'வித்தைக்காரன்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஏற்கெனவே இருந்த சிம்ரன் தன் நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டார். சிம்ரன் குப்தாவும் முறைப்படி நடனம் கற்று பல நடன நிகழ்ச்சிகளில் பட்டம் வென்றவர். இவர் சிம்ரன் இடத்தை பிடிப்பாரா என்பது போகப்போக தெரியும்.
'வித்தைக்காரன்' படத்தை ஒயிட் கார்பட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கி உள்ளார். சதீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்ரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து பிளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது.